பாட்டி வைத்தியம்:
முகம் பளபளப்பாக...
வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில்
வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில்
இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடல்குளிர்ச்சியடைவதோடு முகம்
சுருக்கம் மறையும். மேலும் முகம் பளபளப்பாக மாறும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு
நாளாவது ஆரஞ்சு மற்றும்கேரட் ஜீஸ் குடித்து வந்தால் முகம் பொன்னிறமாக மாறும்.
தலைவலி குறைய...
1.மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை
ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்துகொள்ளவேண்டும். அந்த பொடியை
காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச்
சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.(or)
2. வெற்றிலையை சாறு எடுத்து அந்த சாற்றில் கிராம்பை அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப்பூசி வந்தால் தலைவலி குறையும்.
கண்வலி குறைய...
1.வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து
வந்தால் கண்வலி குறையும்.(or)
2.கருவேலம் கொழுந்துஇலையுடன் சீரகத்தை சேர்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச் செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்துசுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும்.
இவ்வாறு மூன்று நரட்கள் செய்து வந்தால் கண்வலிகுறையும்.
சளி குறைய...
1.பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக நசுக்கி தண்ணீர் விட்டு வேகவைத்து
சூப் செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.(or)
2.வெற்றிலையை இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றைக் கொதிக்க
வைத்து பின்பு ஆறவைத்து நெற்றி பகுதியில் பற்றுப் போட்டுவந்தால் ஓயாதச்
சளிக் குறையும்.(or)
3.தூதுவளைச் சாறு, துளசி இலைச் சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வேளைக்கு ஒரு
அவுன்ஸ் வீதம்சாப்பிட்டு வந்தால் ஓயாத சளிக் குறையும்.
மூச்சு வாங்குவது குறைய...
தும்பை இலைச்சாற்றை மூன்று தேக்கரண்டியளவு காலை வேளையில் மூன்று நாட்கள்
சாப்பிட்டு வாந்தால் மூச்சு வாங்குவது குறையும்.
காதுவலி குறைய...
1.கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் பால் மற்றும் அதிமதுரப்பொடி
அரைத்து காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி
குறையும்.(or)
2. கடுகைஅரைத்து காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சியினால்
ஏற்படும் காதுவலி குறையும்.
ஒற்றை தலைவலி குறைய...
1.ஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிகாய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றைதலைவலி குறையும்.(or)
2.முட்டைகோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக் கொண்டு தலையின் மீது ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத்தலைவலி குறையும்.(or)
இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்புகுறையும்.(or)
இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்புகுறையும்.(or)
3. திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், சந்தனம் மற்றும் படிகாரம் ஆகியவற்றை பசும்பால், இளநீர் விட்டு தனித்தனியாக முறைப்படி ஊற வைத்து அரைத்துஒன்றாக கலந்து உருண்டையாக்கி காய வைத்து இடித்து சலித்து முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு, மூக்கெரிச்சல் குறையும்.
பல் வலி குறைய...
1.ஆலமரப்பட்டையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன்சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும்.(or)
2.பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்புஎண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.
தொண்டைப்புண் குறைய...
மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் எடுத்து விட்டு சூடேற்றி தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.
இருமல் குறைய...
1.வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் சர்க்கரை கலந்து பாகுபதமாககாய்ச்சி இறக்க வேண்டும். வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.(or)

2.மணத்தக்காளி இலை, ஏலக்காய், வெந்தயம், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மண் சட்டியில் போட்டு சிவந்து வரும் வரை நன்குவறுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை மூன்றுவேளையும் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
கண்பார்வை அதிகரிக்க...
1.கேரட், துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சோ்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வைஅதிகரிக்கும்.(or)
2.சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்தபொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.(or)
3.வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.(or)
4.கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சோ்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் கண்வலி குறையும்.
இடுப்பு வலி குறைய...
1.உளுந்தம் பருப்பு உணவு வகைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு பகுதி நரம்புகள் பலப்படும்.(or)
1.உளுந்தம் பருப்பு உணவு வகைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு பகுதி நரம்புகள் பலப்படும்.(or)
2.இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாகச் சூடு செய்து ஆறிய பின் நன்றாக தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வந்தால் இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சிஆகியவை குறையும்.
கழுத்து வலி குறைய...
1.நொச்சி இலையை இடித்து சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து காயவைத்து, அதை வலி உள்ள இடத்தில் தேய்த்துவெந்நீரில் வாரம் இருமுறை குளித்து வந்தால் கழுத்து வலி குறையும்.(or)

2.குப்பைமேனி சாறு எடுத்து நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர கழுத்து வலி குறையும்.
முதுகு வலி குறைய...
1.வெட்டிவேரின் புல்லை எடுத்து கற்கண்டு சேர்த்து நன்றாக அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.(or)
முதுகு வலி குறைய...
1.வெட்டிவேரின் புல்லை எடுத்து கற்கண்டு சேர்த்து நன்றாக அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.(or)
2. மிளகு, கிராம்பு மற்றும் சுக்கு சேர்த்து நீர் விட்டு தேநீர் செய்து தினமும் 2 வேளைகள் குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.(or)
3.பூண்டை நல்லெண்ணெய் சேர்த்து,கொதிக்க வைத்து வடிகட்டி முதுகு வலியுள்ள இடத்தில் தேய்க்க முதுகு வலி குறையும்.
தலைமுடி வளர...
1.சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவிவைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய்அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்சவேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடிநன்றாக வளரும்.(or)

2. வேப்பம் பூவை இலேசாக தணலில் காண்பித்து தாங்கக்கூடிய சூட்டில் வேப்பம் பூவை உச்சந்தலையில் வைத்து தேய்த்து வந்தால் தலைமுடிநன்றாக வளரும்.
வாய்ப்புண்கள் குணமாக...
மணித்தக்காளி இலைகளை நெய்யிலிட்டு வதக்கி மசித்து உணவில் சேர்த்து உண்டு வர வாய்ப்புண், உட்காய்ச்சல் ஆகியன தீரும். (தமிழக அரசுவெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
உடல் சூட்டைக் குறைக்க.....
எள் எண்ணெயைப்(நல்லெண்ணெய்) 15 நாட்களுக்கு ஒருமுறை தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வரக் கண்கள் குளிர்ச்சியடையும்;தலைப்பாரம், உடற்சூடு ஆகியன குறையும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
உடற்பலம் உண்டாக...
சிறுகீரையை உணவுடன் சேர்த்து உண்டு வர உடற்பலம் உண்டாகும் (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
உடல் பருக்க...
கல்யாணப் பூசணிக்காயை வேக வைத்து அரைத்துப் பால்,தேன்,நெய் கலந்து லேகியமாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதை 5 முதல் 10 கிராம்தினம் இருவேளை உண்டு வர உடல் பருக்கும்; உடற்சூடு நீங்கும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
உடல் இளைக்க...
சந்தனத்தைச் சீவி குடிநீர் செய்து குடித்து வர பருத்த உடல் இளைக்கும்; நீர்க்கட்டு, நீரெரிச்சல் ஆகியன தீரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்தியமருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
பசியின்மை, செரியாமை ஆகியன தீர...
தோல் நீக்கிய இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சுத்தமான தேனில் ஊறவைத்துத் தினம் இரண்டு துண்டுகள் மட்டும் உணவிற்கு முன்உண்டுவரப் பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல் ஆகியன தீரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும்நூலிலிருந்து)
வயிற்றுப்புழுக்கள் நீங்க...
சுண்டைக்காயை மோரில் ஊற வைத்து வெயிலில் காயவைத்துச் சுண்டை வற்றலாக்கிச் சூரணித்து 1 முதல் 2 கிராம் வெந்நீருடன் தினமும்இருவேளை உட்கொள்ள வயிற்றுப் புழுக்கள் வெளிப்படும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
வயிற்று வலி, கண்ணெரிச்சல் தீர...
அதிமதுரத்தை ஒன்றிரண்டாக இடித்து விதிப்படிக் குடிநீர் செய்து அத்துடன் தேவையான அளவு சர்க்கரை, பால் ஆகியன சேர்த்துத் தீப்பிடிக்காமல்பாகுபதம் வரும்வரை காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இரண்டு தேக்கரண்டி தினம் இருவேளை உண்டு வர நீரெரிச்சல்,வயிற்றெரிச்சல், வயிற்று வலி,பசியின்மை, சுவையின்மை, கண்ணெரிச்சல் ஆகியன தீரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
புண்கள் குணமாக...
இலுப்பைப் பிண்ணாக்கை இடித்துச் சூரணமாக்கி வைத்துக் கொண்டு இளவெந்நீரில் குளித்து, இச்சூரணத்தைத் தேய்த்துக் கழுவ, அழுகிய, நாட்பட்டசீழ்கோர்த்த புண்கள் குணமாகும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
உடல் அரிப்பு, சொறி, சிரங்கு ஆகியன நீங்க...
குப்பைமேனி இலைச் சாற்றுடன் மஞ்சள் சேர்த்து உடலில் பூசி வர உடல் அரிப்பு, சொறி, சிரங்கு ஆகியன தீரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்தியமருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
இளநரை மாற...
மருதோன்றி(மருதாணி) இலையை நீர் விட்டு அரைத்துக் கற்கமாக்கித் தேங்காய் எண்ணெயில் இட்டு வெயிலில் வைத்து, ஈரம் வற்றிய பின் வடித்துத்தலையில் தடவி வர இளநரை மாறும், கண் குளிர்ச்சியடையும், நல்ல தூக்கம் உண்டாகும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்'என்னும் நூலிலிருந்து)
முடி வளர...
1.சடாமஞ்சிலைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர கூந்தல் வளரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்'என்னும் நூலிலிருந்து).(or)

2. வழுக்கையில் முடிவளர்வது என்பது முடியாத காரியமே ஆனால் சிலருக்கு அது நடக்க கூடிய காரியமே. கீழாநெல்லி வேறை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் முடி வளரும்.
சொத்தைப்பல் குணமாக...
கண்டங்கத்தரிப்பழ விதையைக் காய வைத்து அனலில் இட்டு வரும் புகையை வாயில் படும்படி செய்ய சொத்தைப்பல் குணமாகும்;பல்வலிகுறையும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
கண்டங்கத்தரிப்பழ விதையைக் காய வைத்து அனலில் இட்டு வரும் புகையை வாயில் படும்படி செய்ய சொத்தைப்பல் குணமாகும்;பல்வலிகுறையும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
பொடுகு குணமாக, முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த...
பொடுதலை இலைகளை நல்லெண்ணெயில் இட்டு வெயிலில் வைத்து ஈரம் வற்றியபின் வடித்துத் தினமும் தலையில் தேய்த்து வர பொடுகுகுணமாகும்; முடி உதிரல் கட்டுப்படும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
பற்களின் கறை நீங்க...
நாயுருவி வேரைச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு பல் துலக்கி வரப் பல் துப்புரவாகும்; பற்களின் கறை நீங்கும்; 1/2 முதல் 1 கிராம் வரை உண்டுவர உடல் வலுவாகும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
மூக்கடைப்பு சரியாக...
ஓமத்தை இலேசாக வறுத்துப் பொடி செய்து 2 கிராம் எடுத்து அத்துடன் 1 கிராம் பச்சைக் கற்பூரம் சேர்த்து வெள்ளைத் துணியில் கட்டி நுகர,மூக்கடைப்பு, மூக்குநீர் பாய்தல், பீனிசம் ஆகியன தீரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
முகப்பரு, கால் ஆணி, பித்தவெடிப்பு சரியாக...
1.அம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்குப் பால்சுரக்கும்; முகத்தில் பூசி வர, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும்; காலில் பூசி வரக் காலாணி, பித்த வெடிப்பு ஆகியன தீரும்; மருக்கள் மீதுபூச அவை உதிரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)(or)
2. சின்ன வெங்காயத்தை எடுத்து பாலில் வேக வைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்.
விடியற்காலையில் நீர் அருந்துதல்....
துளசி, வில்வம், அருகம்புல் ஆகிய ஏதாவது ஒன்றினை எடுத்து இரவில் ஒரு லிட்டர் நீரில் போட்டு மூடிவைத்து அந்த நீரை விடியற்காலையில்அருந்தினால் உடலில் வெப்பம் சம்பந்தமான நோய்கள் தீரும். விடியற்காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் நீர் அருந்துதல் வேண்டும். இதனால்உடல் வெப்பம் குறையும். சிறுநீர்பை, மலக்குடல், அடிவயிறு ஆகியவற்றின் வெப்பம் குறையும். மலச்சிக்கல் நீங்கும். இரவில் ஒரு லிட்டர் நீரைக்காய்ச்சி அந்த நீரை விடியற்காலையில் அருந்தினால் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் குறையும்.
இருமல், இரைப்பு நோய் ஆகியன குணமாக...
தாளிசபத்திரி சூரணத்தைத் தேன் கலந்து தினம் 1/2 முதல் 1 கிராம் சாப்பிட்டு வர இருமல், இரைப்பு ஆகியன குணமாகும். (தமிழக அரசு வெளியிட்ட'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
உடல் வலி, மூட்டு வலி, காய்ச்சல், ஆஸ்துமா, வீக்கம் உள்ளவர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு...
உடல் வலி, மூட்டு வலி, காய்ச்சல், ஆஸ்துமா, வீக்கம் போன்ற உடல் உபாதை உள்ளவர்கள் உணவில் புளிப்பைச் சேர்த்துக் கொள்ள கூடாது.ஏனெனில் புளிப்பு உடலில் அமிலத்தை அதிகரித்து இன்னும் இந்த நோய்களின் தன்மையை அதிகரிக்கும். 10-15 நாட்களுக்கு புளிப்பான உணவைதவிர்க்க வேண்டும். தக்காளி, எலுமிச்சை, தயிர், மோர், புளி, ஆரஞ்சு, சாத்துகுடி, மாம்பழம், திராட்சை ஆகியவை புளிப்புத் தன்மை உள்ளவை.நோயாளிகள் குளிர்பானங்களையும், ஐஸ்கிரீம் வகைகளையும் தவிர்க்க வேண்டும். காயிலே புளிப்புதன்மையும், பழுத்த பின் இனிக்கும்பழவகைகளையும் தவிர்க்க வேண்டும். பப்பாளி, சீதாபழம், கொய்யா, வாழைப்பழம், சப்போட்டா, அத்திபழம், கரும்பு, எலுமிச்சை சேர்க்காதகரும்புச்சாறு, இளநீர் மற்றும் தர்பூசணி சேர்த்துக் கொள்ளலாம்... மைதா சேர்க்கப்பட்ட எந்த உணவையும் உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது.மைதா உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதால் பிரட், பிஸ்கட், நூடுல்ஸ், சமோசா போன்ற மைதாவால் ஆன பொருட்களை எப்போதுமேஅறவே தவிர்க்க வேண்டும். மது, புகை பிடித்தல் மற்றும் புகையிலை போடுவதை தவிர்க்க வேண்டும்.

இரத்த பேதியை குணப்படுத்த:
நீரழிவு நோய் குணமாக:
மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.
மூட்டுவலி குணமாக:
அத்திபாலை பற்று போட்டு வர மூட்டுவலி குணமாகும்.
நரம்பு தளர்ச்சி நீங்க:
1.தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.(or)
2. இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாகச் சூடு செய்து ஆறிய பின் நன்றாக தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வந்தால் இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சி ஆகியவை குறையும். உளுந்தம் பருப்பு உணவு வகைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு பகுதி நரம்புகள் பலப்படும்.
பற்கள் உறுதியாக இருக்க:
மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.
சேற்றுபுண் குணமாக:
காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.
ஆண்மை குறைவு நீங்க:
அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும்.
வயிற்றுவலி குணமாக:
குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.
தலைவலி:
ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு:
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
நெஞ்சு சளி:
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.
தொடர் விக்கல்:
நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
வாய் நாற்றம்:
சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
உதட்டு வெடிப்பு:
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.
அஜீரணம்:
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.
குடல்புண்:
மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.
வாயுத் தொல்லை:
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.
வயிற்று வலி:
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.
மலச்சிக்கல்:
செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
பித்த வெடிப்பு:
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மூச்சுப்பிடிப்பு:
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
தேமல்:
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.
மூலம்:
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.
தீப்புண்:
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
மூக்கடைப்பு:
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
வறட்டு இருமல்:
எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.
எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.
சளிகட்டு நீங்க:
தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை ,கண்டங்கத்தி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.
பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த:
தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட வாந்தி வராது.
தலைப்பாரம் குறைய:
நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
வாழைத்தண்டு சாறு:
வாழைத்தண்டு சீறு சிருநீரக கல் வராமல் தடுக்கவும் வந்தால் அது கரைந்து விடவும் மிக நல்லது . எனவே வாழைத்தண்டு சாறு எடுத்த தினமும 3 வேளைகளில் குடித்து வந்தால் சிருநீரக கல் கரைந்துவிடும். வாழைத் தண்டு மட்டுமல்லாது வாழைப்பூவும் சிறுநீருக்கு நல்லது. தினமும் குறைந்தது 1 லிட்டர் தண்ணீராவது அடிக்கடி குடித்து வந்தால் உடல் கழிவுகள் எளிதாக வெளியேற துணைபுரிவதால் சிறுநீரகத்திற்கு அதிக வேலைப்பளு கொடுக்காமல் அதில் உப்புக்கழிவுகள் கட்டிப்படுவதையும் குறைக்கும்.
(Source:கிராமத்துபாட்டி வைத்தியம் and (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து) >)